தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகில் அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நேற்றைய தினம் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இன்றைய தினம் சென்னையில் பரவலாக மழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்ததற்கான காரணத்தை, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விவரித்துள்ளார்.
அதன்படி, ரெட் அலர்ட் என்பதால் அனைத்து பகுதிகளிலும் 20 செமீ அளவிற்கு மழை பெய்யும் என அர்த்தம் இல்லையெனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழக்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது நாளைய தினம் கரையை நோக்கி வரும் போது ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சிறிய புள்ளியாக அல்லாமல், மிகப்பரந்த நிலையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“