Weather Forecast Report | John Pradeep | தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகரி பாரன்ஹீட் குறையாமல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர். குறிப்பாக ஈரோடு, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் காரணம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இநத நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மஞ்சள் எச்சரிக்கை பட்டியலில், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் 4ஆம் தேதிவரை வெப்ப அலை அதிகரித்து காணப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“