/indian-express-tamil/media/media_files/2025/04/18/U6tNA1IfDdrDm0DZb4uD.jpg)
நாகப்​பட்​டினம் மாவட்டம் விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் எம்​. அலெக்​ஸ்​. இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு தகவல் கிடைத்​தது.
இதையடுத்​து, அவரை கடந்த ஒரு வார​மாக போலீ​ஸார் கண்​காணித்து வந்​தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழி​யாக இலங்​கைக்கு படகு மூல​மாக போதைப்​பொருட்​களைக் கடத்தி செல்​ல​விருப்​ப​தாக தகவல் கிடைத்தது.
இந்​நிலை​யில், புதுக்கோட்டை மேல​விலக்​குடி​யில் இருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைது செய்த மத்​திய போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், அவரிட​மிருந்த 950 கிராம் எடை​யுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்​தம்​பெட்​டமைன் என்ற போதைப் பொருளை​யும், ரூ.2 லட்​சம் ரொக்​கத்​தை​யும் பறிமுதல் செய்​தனர்.
பின்​னர், புதுக்​கோட்டை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அலெக்ஸை நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர். தற்​போது கைதாகி​யுள்ள அலெக்ஸ் மீது பல்​வேறு மாநிலங்களில் இருந்து இலங்​கைக்கு போதைப்​பொருள் கடத்​தி​யது தொடர்​பான வழக்​கு​கள் நிலுவை​யில் இருப்​ப​தாக போலீஸார்​ தெரி​வித்தனர்​.
க.சண்முக வடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us