சென்னையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில் “ மெட்ரோ ரெயில் 2 ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 89 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ஒரு ரயிலில் ஆயிரம் பேர் வவையில் பயணம் செய்யலாம். அந்த வகையில் இட வசதியும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
செல்போன் மற்றும் கம்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ள தண்டவாளங்களில் ரயில் இயக்கம் குறித்து அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் டூ பூந்தமல்லி வரையிலான 4வது வழித் தடத்தில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“