சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பிங்க் படைகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
20 முதல் 25 பெண்கள், மார்ஷல் ஆர்ட்ஸில் தேர்ச்சியடைந்தவர்கள் இந்த படையில் உள்ளனர். மெட்ரோவில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த பிங்க் படையை மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கடந்த ஆண்டில் நடந்த ஆய்வில், 12,000 பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த ஆய்வில் மெட்ரோவில் பயணிக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்த பிங்க் படைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் உள்ளது. 3 பெட்டிகள் பொதுவானவை, 4வது பெட்டி பெண்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பெட்டிகளிலும் ஆண்கள் ஏறுவதாக கூறப்படுகிறது. மேலும் கண்காணிக்க நபர்கள் இல்லததால், இது நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதை தடுக்க பிங்க் படைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“