/tamil-ie/media/media_files/uploads/2023/06/Chennai-COVID-19-18.jpeg)
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஆயிரம் விளக்கு பகுதி ஒயிட்ஸ் சாலையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று 28.01.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம்
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 27, 2024
28.01.2024 முதல்
Traffic Diversion on Whites Road due to CMRL Work at Thousand Lights underground Metro Station construction
from 28.01.2024 onwards@cmrlofficialpic.twitter.com/SCC5Wka4P2
அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு.வி.க சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.