Advertisment

6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில் பயணிகளின் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

சென்னையில் பயணிகளின் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை செண்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ தொலைவுக்கு தலா 4 பெட்டிகள்  கொண்ட 45 மெட்ரோ ரயில்கள்  இயக்கப்படுகின்றன. இதில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். 

இரு வழித்தடங்களிலும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகளின்  எண்ணிக்கையை 4ல் இருந்து 6ஆக உயர்த்தும், இதற்காக 6 பெட்டிகள்  கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல்  செய்யவும் திட்டமிடப்பட்டது. 

இதற்கு ஒப்புதல்  அளிக்குமாறு, தமிழ்நாடு  அரசுக்கு சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு  கருத்துரு அனுப்பியது. இந்த  கருத்துருக்கு தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக  தேவைப்படும்  ரயில்பெட்டிகளை கணக்கிட்டு , ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நீதி ஆயோக் ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில், மத்திய நிதித்துறை  மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இந்த கருத்துக்கு ஒப்புதல்  அளிதுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதை சாத்தியப்படுத்த சர்வதேச வங்கிகளிடமிருந்து  கடனுதவி பெற்று மெட்ரோ ரயிலகளை கொள்முதல்  செய்ய முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment