சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவகாரம்; சிவசுப்பிரமணியன் ஜாமீன் கோரி மனு

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

By: Updated: December 18, 2019, 12:41:45 PM

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த 2ம் தேதி கனமழை பெய்த நிலையில் சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் அருகில் வசித்த 17 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சுவர் எழுப்பிய நில உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 3 ஆம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது.

இந்நிலையில், சிவசுப்பிரமணியன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து ஜாமீன் கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியன் சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது. எந்த உள் நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தனக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவசுப்பிரமணியத்திற்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை நாளை டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mettupalaiyam wall collapse 17 dead case accused sivasubramaniyan bail petition hearing postponed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement