/indian-express-tamil/media/media_files/2025/06/15/ZxNLYZW2FcIn2D58DCYH.jpg)
தமிழக மக்களுக்கு தி.மு.க. துரோகம் செய்துவிட்டது - அன்புமணி
மேட்டூர்அணைநீர்நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,850 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
- Aug 24, 2025 17:46 IST
தாய் ,தந்தை, மகன் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு
நெல்லை, முன்னீர்ப்பள்ளம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக தாய், தந்தை, மகன் ஆகியோர் தீக்குளித்து தற்கொலை முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாய் மெர்சி, மகன் கார்லிபினோ ஆகியோர் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 24, 2025 17:08 IST
தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது: அன்புமணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அரசு அனுமதி கொடுத்தது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
- Aug 24, 2025 16:38 IST
பொள்ளாச்சியில் பாலியல் தொல்லை - ஆசிரியர்கள் மீது போக்சோ
கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 24, 2025 16:35 IST
மதுரை தனியார் மருத்துவ மனைக்கு ரூ.1லட்சம் அபராதம்
மதுரை அண்ணா நகரில் மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டிய தனியார் மருத்துவ மனைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
- Aug 24, 2025 16:15 IST
திருச்செந்தூரில் 80 அடி வரை உள்வாங்கிய கடல்; பக்தர்கள் அதிர்ச்சி
திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல், இன்று மேலும் 80 அடி வரை உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 80 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- Aug 24, 2025 16:12 IST
’ஆபரேஷன் கிளீன் கோவை' – காவல்துறை அதிரடி சோதனை
’ஆபரேஷன் கிளீன் கோவை' என்ற பெயரில் 412 காவலர்கள், 91 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் கிலோ கணக்கில் கஞ்சா, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- Aug 24, 2025 15:44 IST
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனுமதியை திரும்பப்பெறுமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Aug 24, 2025 15:00 IST
நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் தேஜகூ தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், தேர்தல் முடிவுக்கு பின்தான் முதலமைச்சர் யார் என்பதை முடிவெடுப்பார்கள்
-திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
- Aug 24, 2025 13:44 IST
தூத்துக்குடியில் திருமாவளவன் பேட்டி
தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர் .இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல, இந்தியாவிற்கான தலைவர் பதவி. எனவே இதில் தமிழர் என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவதில் எந்தப் பொருளும் இல்லை
– தூத்துக்குடியில் திருமாவளவன் பேட்டி
- Aug 24, 2025 13:43 IST
விஜயை கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள்
மதுரையில் நடந்து முடிந்த தவெக 2வது மாநில மாநாட்டில் விஜயின் பேச்சை எதிர்த்து திமுகவினர் மதுரை முழுவதும் ’வாட் பிரோ ஓவர் பிரோ’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
- Aug 24, 2025 12:43 IST
ராமேஸ்வரத்தில் ஹரி சாமி தரிசனம்
ராமேஸ்வரம் கோயிலில் இயக்குநர் ஹரி சாமி தரிசனம் செய்துள்ளார். அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பேட்டி அளித்துள்ளார்.
- Aug 24, 2025 12:22 IST
மாணவர்கள் விடுதியில் சோதனை - 50க்கும் மேற்பட்டோர் பிடித்து வரப்பட்டு விசாரணை
கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் ஆயுதங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் பிடித்து வரப்பட்டு விசாரணை நடக்கிறது.
- Aug 24, 2025 12:00 IST
நா.த.க முற்றுகை போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமான பணியை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Aug 24, 2025 11:16 IST
பாலியல் தொழில் - பாஜக நிர்வாகி கைது
கரூர் மாவட்டம் தான்தோணிமலை அருகே ஊரணிமேடு பகுதியில் பாலியல் தொழில் செய்த புகாரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
- Aug 24, 2025 11:16 IST
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
- Aug 24, 2025 11:15 IST
யானை தாக்கி ஒருவர் பலி
கோவை மாவட்டம் பெருமாள் முடி கோயிலுக்கு நேற்றிரவு சென்று திரும்பிய 4 பேரை அட்டுக்கல் பகுதியில் காட்டு யானை விரட்டியதில் மருதாச்சலம் (65) என்பவர் உயிரிழந்தார். மூவர் தப்பியோடிய நிலையில் மருதாச்சலம் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
- Aug 24, 2025 10:07 IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்த விபரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,850 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
- Aug 24, 2025 09:43 IST
கோவையில் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை
கோவை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆயுதங்கள் பதுக்கல் உள்ளிட்டவை குறித்து, 90 தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
- Aug 24, 2025 09:21 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 10,850 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.