மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் வெகுவாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஒரே நாளில் 5 அடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
மேட்டூர் அணையின் நிர்மட்டம் 5 அடி உயர்ந்து தற்போது 45.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாகவும், திறப்பு 500 கன அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் தற்போதயை நீர் இருப்பு அளவின் நிலவரம் 14.83 டிஎம்சியாக உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர் வரப்பு மற்றும் நீர்மட்டத்தின் உயர்வாலும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.