/indian-express-tamil/media/media_files/2025/08/12/pamban-bridge-technical-issue-2025-08-12-18-32-36.jpg)
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.63 அடியாக உயர்வு, நீர் இருப்பு 91.302 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 7500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Aug 12, 2025 19:39 IST
சீமான் வழக்கில் 20-ம் தேதி இறுதி விசாரணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு
டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த வழக்குக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 20-ல் இறுதி விசாரணை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் வரும் 20 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. திருச்சியில் சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
- Aug 12, 2025 18:33 IST
பாம்பன் புதிய பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு - சென்னை செல்லும் 2 ரயில்கள் தாமதம்
பாம்பன் புதிய ரயில் பாலம் மேலே உயர்த்தப்பட்டு மீண்டும் முழுமையாக கீழே இறக்க முடியாததால் ராமேஸ்வரத்திலில் சென்னை செல்லும் 2 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அக்காள் மடம் ரயில் நிலையத்தில் இரு ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 17:28 IST
ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் போக்சோவில் கைது
ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஆனந்த் குமார் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு செல்போன் மூலம் ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை தந்ததாக ஆனந்த் குமார் மீது சிறுவர் நலக்குழுவினர் தந்த புகாரின்பேரில் ஆனந்த் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.
- Aug 12, 2025 17:18 IST
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை
மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 28ல் விசாரணையின்போது இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீஸ் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது. ஜூலை 12ம் தேதி முதல் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. திருப்புவனம் காவல் நிலையத்தில் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்
- Aug 12, 2025 17:14 IST
சுர்ஜித், தந்தையிடம் 4 மணி நேரமாக விசாரணை
நெல்லையில் கவின் ஆணவ கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தையிடம் 4 மணி நேரமாக எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார். சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான எஸ்.ஐ. சரவணனிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு யாரேனும் சதி திட்டம் தீட்டி தந்தார்களா?, முன்கூட்டியே திட்டமிட்ட கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்கேனும் கொலையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Aug 12, 2025 16:41 IST
சொத்துவரி முறைகேடு - உதவி ஆணையர் கைது
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு வழக்கு. தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் உதவி ஆணையர் சுரேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது. வழக்கில் ஏற்கனவே சொத்துவரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு செயல்பட்டு வந்த நிலையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Aug 12, 2025 15:37 IST
ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு
தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள். செங்கல்பட்டு மருத்துவ கழிவுகளை எரியூட்டும் நிறுவனத்தில் பாதுகாப்பாக அழிப்பு14,846 கிலோ கஞ்சா, 2 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது.
- Aug 12, 2025 14:58 IST
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் கைது எண்ணிக்கை 13 ஆக உயர்வு
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுரேஷ் குமார் தூத்துக்குடியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Aug 12, 2025 14:11 IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - எஸ்எஸ்ஐ கைது
நாமக்கல், கொல்லிமலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சிறப்பு எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
- Aug 12, 2025 14:10 IST
சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகள் அகற்ற உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- Aug 12, 2025 13:24 IST
பா.ஜ.க கூட்டணிக்கு ஓ.பி.எஸ் நிச்சயம் வருவார் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி: “பா.ஜ.க தரப்பில் இருந்து ஓ.பி.எஸ் இடம் இதுவரை யாரும் பேசவில்லை; பா.ஜ.க-வின் சந்தோஷ் அழைத்ததாக சொல்லப்படுவது உண்மையில்லை என ஓ.பி.எஸ் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள்தான் சமாதானப்படுத்த வேண்டும்; பா.ஜ.க கூட்டணிக்கு நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் வருவார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
- Aug 12, 2025 12:41 IST
திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா மாரடைப்பால் மரணம்
திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது 54. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜாதா தற்போது 31வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
- Aug 12, 2025 10:33 IST
கவின் ஆணவக் கொலை வழக்கு
நெல்லை: கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 12, 2025 10:32 IST
மதுரை நாகம்மாள் கோயில் திருவிழா
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாகம்மாள் கோயில் திருவிழாவை அடுத்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
- Aug 12, 2025 10:31 IST
திருச்செந்தூர் கோயிலில் சிவா சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவா சாமி தரிசனம் செய்தார்.
Video: Sun News
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவா சாமி தரிசனம்#SunNews | #ActorSiva | #Tiruchendurpic.twitter.com/k8O9EVnZcI
— Sun News (@sunnewstamil) August 12, 2025 - Aug 12, 2025 09:49 IST
திருச்சி: அரசு பள்ளி முன்பு பெற்றோர் போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- Aug 12, 2025 09:16 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 20வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Aug 12, 2025 09:16 IST
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 16,288 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.63 அடியாக உயர்வு, நீர் இருப்பு 91.302 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், அணையில் இருந்து மொத்தமாக 7500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Aug 12, 2025 09:16 IST
69.77 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.77 அடியை எட்டியதால் விரைவில் அணை நிரம்ப உள்ளது. அணை நிரம்ப உள்ளதால் மதகுப்பகுதிகளில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அணையின் 7 பிரதான பெரிய மதகுகள், 7 சிறிய மதகுகள் வழியாக நீரை திறந்து சோதனை மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்ப உள்ளது.
- Aug 12, 2025 09:15 IST
வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி சிறுவன் பலி
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழந்தார். சிறுத்தை தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளியின் 5 வயது மகன் உயிரிழந்தார் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- Aug 12, 2025 09:15 IST
கோவையில் சிக்கியது ரூ.7 கோடி உயர்ரக கஞ்சா
கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சுமார் 6.7 கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.