மேட்டூர் அணை நிலவரம் :
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்கிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால், அணையில் இருந்து அதே அளவு தண்ணீரே திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் திறந்து விடப்பட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கொள்ளிடத்தில் பாயும் வெள்ளத்தால் அந்த ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் வீடுகள் விட்டு வெளியேறி உள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.