Mettur Dam Water Level Southwest Monsoon delay affects Delta farmers : மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
மேட்டூர் அணையில் நீர் திறந்தவிட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் விவசாயிகள் எந்த பிரச்சனையும் இன்றி விவசாயம் செய்து வருவார்கள்.
ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததின் காரணமாகவும், இவ்வருடத்தின் பருவ மழை மிகவும் தாமதமாக தொடங்கிய காரணத்தாலும் கர்நாடகாவில் இருந்தோ கேரளத்தில் இருந்தோ தமிழக அணைகளில் நீர் நிரம்பவில்லை.
பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை
இதனால் வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக இம்முறை நீர் திறந்துவிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் கபினி அணை விரைவாக நிரம்பி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்கும். அதன் பின்னரே பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும். 16 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இந்த நீரை நம்பித்தான் உள்ளது.
மேலும் படிக்க : புதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை! காரணங்கள் என்ன?
8 ஆண்டுகளாக திறக்கப்படாத மேட்டூர் அணை
ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் போதிய மழையின்மை காரணமாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இம்முறையும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
2011ம் ஆண்டு தான் மேட்டூரில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்த 8 ஆண்டுகளில் அப்படியான ஒரு சூழல் உருவாகவில்லை.
மேட்டூர் அணையின் நேற்றைய நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.59 அடியாகவும், நீர் இருப்பு 15.14 டி.எம்.சியாகவும் உள்ளது.