கர்நாடகாவின் காவிரி நதிநீர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாயால் கர்நாடகாவில் உள்ள அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால், தமிழகத்துக்கு 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையொட்டி, இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 102 அடியை தாண்டியது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பின்னர் 100 அடியை எட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதிகளுக்கு இன்று காலை 10.30 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து நீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முதல்வர் பழனிசாமியுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி மற்றும் அமைச்சர் பலரும் இந்த நீர் திறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.