மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு நேற்று தாண்டியதை தொடர்ந்து நீர் திறப்பு அளவு அதிகரிப்பு

By: July 24, 2018, 8:52:40 AM

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு நேற்று எட்டியதை அடுத்து, அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மத்திய நீர்வள ஆணையம் விடுத்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் நீர் கொள்ளளவு அதிகரித்து வருகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து 82 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகமாகி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே நேற்று மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்திற்காக அணை திறக்கப்பட்டது. முன்னதாக காவிரி ஆறுப்பகுதிகளுக்கு அணையில் இருந்து நீர் செல்ல முதல்வர் பழனிசாமி அணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார். தற்போது ஒகேனகல்லுக்கு 80 ஆயிரம் கனடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம், அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று தாண்டியது. நொடிக்கு 72456 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 120.6 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு, நேற்றிரவு 10 மணியளவில் 80,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 16 கண் மதகு வழியாக 60,000 கனஅடி தண்ணீரும், மேட்டூர் அணை நீர்மின் நிலையத்தின் வழியாக 20,000 கனஅடி தண்ணீரும், கால்வாய் வழியாக 1,000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

இதனால் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்குமாறும், கரையோரப் பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mettur dam water release level increased to 80 thousand per second

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X