மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டி வருவதால் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியவுடன் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் முழுக்கொள்ளளவு எட்டியவுடன் நீர் திறக்கும் அளவு தற்போது இருப்பதை விட கூடுதலாக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள்ளது.