மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அதிமுக-வினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் பலரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அதிமுக தலைமையிலான தமிழக அரசு, சிறப்பான முறையில் மாவட்டந்தோறும் விழா எடுத்து கொண்டாடி வருகின்றது. சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில், அதிமுக அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக எம்பிக்கள், மற்ற கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.