மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார்.
இப்படி கூட செய்யலாமா? அதிக பென்சன் வாங்க அரசு ஊழியர்கள் செய்ய வேண்டியது இதுதான்!
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகனான எம்.சி.சந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சந்திரனின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை திடீரென உடல்நிலை மோசமானது.
அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெண்டிலேட்டர் சிகிச்சை துவங்குவதற்கு முன்னரே எம்.சி.சந்திரன் உயிரிழந்தார்.
புரட்சித்தலைவர் Dr.MGR அவர்களின் சகோதரர் திரு.M.G.சக்ரபாணி அவர்களது மகன் திரு.M.C.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வேதனையுற்றேன்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். pic.twitter.com/B66KIXouLH
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 11, 2020
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் சகோதரர் திரு.எம்.ஜி.சக்ரபாணி அவர்களது மகன் எம்.சி.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வருத்தமுற்றோம். அன்னாரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
இதயதெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் திரு.எம்.ஜி. சக்கரபாணி அவர்களின் மகன் திரு. சந்திரன் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 11, 2020
அதோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், எம்.சி.சந்திரன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Mgr brother son mc chandran dies due to covid 19 coronavirus
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?