மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன் கொரோனாவால் உயிரிழந்தார்.
இப்படி கூட செய்யலாமா? அதிக பென்சன் வாங்க அரசு ஊழியர்கள் செய்ய வேண்டியது இதுதான்!
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகனான எம்.சி.சந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சந்திரனின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை திடீரென உடல்நிலை மோசமானது.
அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வெண்டிலேட்டர் சிகிச்சை துவங்குவதற்கு முன்னரே எம்.சி.சந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் சகோதரர் திரு.எம்.ஜி.சக்ரபாணி அவர்களது மகன் எம்.சி.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வருத்தமுற்றோம். அன்னாரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், எம்.சி.சந்திரன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”