திருப்போரூர் பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்.ஜி.ஆர் சிலையில் போடப்பட்டிருந்த காவி துண்டை காவல்துறையினர் நீக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து சிலைக்கு காவித்துண்டு போட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“