ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்: மோடி- தலைவர்கள் புகழாரம்
Tamilnadu Former chief minister DR.MGR’s 105th birthday, pm modi and politicians pay tributes Tamil News: எம்.ஜி.ஆரின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
Tamilnadu Former chief minister DR.MGR’s 105th birthday, pm modi and politicians pay tributes Tamil News: எம்.ஜி.ஆரின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
MGR 105th birthday Tamil News: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுகவின் நிறுவனருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொண்டப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertisment
இதற்கிடையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அன்னாரின் புகைப்படத்தை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து புகழ் வணக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!