திருச்சியில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடல்: எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உற்சாகம்
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திருச்சி அதிமுகவினர் திருச்சியில் உள்ள பேலஸ் என்ற பழைமை வாய்ந்த திரையரங்கில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை வெளியிட்டு இன்று முழுவதும் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கு இலவச காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
Advertisment
அதன் தொடர்ச்சியாக இன்று மாலை காட்சியை காண்பதற்கு வந்திருந்த ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ஒருவருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் இரண்டாம் பரிசாக ரூபாய் 1000/- மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சில்வர் குடங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Advertisment
Advertisements
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தில்லைநகர் பகுதி கழக செயலாளர் முஸ்தபா மற்றும் காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் சுரேஷ் குப்தா ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும் பரிசுகளை கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் மற்றும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் மற்றும் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“