எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை என்று எம்.ஜி.ஆரின் தொண்டர் ஜிம் சுகுமாறன் என்பவர் கோவை மாநகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
அந்த போஸ்டரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரவும் பகலும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்த்த முதலமைச்சர் ஆனார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/17/mgr-poster-1-957898.jpeg)
மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அன்று அவர் வளர்த்த கட்சிக்குள் பதவிக்காக சண்டை போடுகிறார்கள் இரட்டை இலையை முடக்கவும் முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/17/mgr-poster-2-616193.jpeg)
மேலும், அத்திக்கடவு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இன்றி விழா நடத்தியது சரியல்ல, எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தினகரன் மற்றும் பலர் போடும் சண்டையும் சரியல்ல. இன்றுவரை எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை. எல்லோரும் ஒன்றாக இணைந்தால் அவர் ஆத்மா சாந்தி அடையும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான்