New Update
/
தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை ரத்து செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பான தமிழ்நாடு சமுக சேவை சங்கத்தின் (டி.ஏ.எஸ்.ஒ.எஸ்.எஸ் - TASOSS) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சி.ஆர்.ஏ - FCRA) பதிவை ரத்து செய்துள்ளது.
இந்த அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) தொண்டு நிறுவனம், 2024-ல் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாவது கிறிஸ்தவ சங்கமாகும்.
தயாராகி வரும் இந்த அமைப்பின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு சமுக சேவை சங்கத்தின் (டி.ஏ.எஸ்.ஒ.எஸ்.எஸ்) என்பது தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, இந்த தொண்டு நிறுவனம் இனி வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற தகுதியற்றது, விதி மீறல் காரணமாக இதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறலாம். வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கட்டாயமாகும்.
வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற அமைப்பின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த அமைப்பின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவும் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வேர்ல்ட் விஷன் அதன் தாய்க் குழுவானது, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மிகப் பெரிய கிறிஸ்தவ தன்னார்வக் குழுக்களில் ஒன்று. வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
எஃப்.சி.ஆர்.ஏ பதிவு மூலம், உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்துகிறது, அத்தகைய நிதிகள் நாட்டின் உள் பாதுகாப்பை மோசமாக பாதிக்காத அளவில் ஒழுங்குபடுத்துகிறது.
2015-ம் ஆண்டு முதல், 16,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு விதிமீறல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3 நிலவரப்படி, நாட்டில் 17,019 எஃப்.சி.ஆர்.ஏ பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. உள்துறை அமைச்சகம் அவைகள்ன் விண்ணப்பத்தை புதுப்பிக்க மறுத்ததால் அல்லது தொண்டு நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ பதிவுக்கு விண்ணப்பிக்காததால், கிட்டத்தட்ட 6,000 தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ஜனவரி 1, 2022 முதல் செயல்படுவதை நிறுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.