உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா

இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அதே தீவிரத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்று நம்புகிறோம்

உள்ளாட்சித் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எடுத்துரைத்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளும் விடியோவாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபிதி தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முக சுந்தரமும் ஆஜராதி வாதாடினர். அப்போது, அதிமுக தரப்பில் 20 விழுக்காடு வாக்குச்சாவடி இல்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அவர், முடிந்த வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ” தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசுப் பணியாளர்களும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். எந்த குறையும், புகாரும் ஏற்படாத வகையில் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் 
சாத்தியமான அளவிற்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கி, வாக்குப்பதிவு நிறைவு வரை கண்காணிப்பு இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாக்கு பெட்டி வைக்கும் அறை வெளியே, உள்ளேயும் சிசிடிவி கேமரா தொடர்ச்சியாகத் தடையின்றி இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்துக்குத் தலா ஒருவர் வீதம் 9 மாவட்டத்துக்கு 9 மத்திய அரசு அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அதே தீவிரத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்று நம்புகிறோம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mhc direct state govt to ensure cctv coverage in all polling booths

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com