Advertisment

‘மைச்சாங்’ புயல்: ஆந்திரா, தமிழ்நாடு ரயில் சேவைகள் பாதிக்க வாய்ப்பு - தெற்கு ரயில்வே

‘மைச்சாங்’ புயல் வானிலை நிலைமைகள், அடுத்த இரண்டு நாட்களில் இந்தப் பகுதியில் ரயில் சேவைகளை மாற்றக்கூடும் என்பதால், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு மத்திய ரயில்வே வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
railway Train

‘மைச்சாங்’ புயல்: ஆந்திரா, தமிழ்நாடு ரயில் சேவைகள் பாதிக்க வாய்ப்பு - தெற்கு ரயில்வே

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நிலவும் ‘மைச்சாங்’ புயல் வானிலை நிலைமைகள், அடுத்த இரண்டு நாட்களில் இந்தப் பகுதியில் ரயில் சேவைகளை மாற்றக்கூடும் என்பதால், பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு மத்திய ரயில்வே வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

Advertisment


கடலோரப் பகுதிகளில் பலத்த மழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட ரயில் சேவைகள் சூழ்நிலையின் கோரிக்கைகளின்படி திசைதிருப்பப்படவோ, மாற்றியமைக்கப்படவோ, பகுதியளவு ரத்து செய்யப்படவோ அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆர். தனஞ்ஜெயலு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் ரயில் சேவை தொடர்பான தகவலக்ளைத் தெரிந்துகொள்ள எந்த விசாரணைக்கும், பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள ரயில் தடங்களில் மழைக்கால ரோந்து; நிகழ்நேர தகவலைப் பெற, பாதிக்கப்படக்கூடிய அனைத்து பாலங்கள் மற்றும் இடங்களில் காவலாளிகள்; பாதிக்கப்படக்கூடிய சாலை-கீழ்-பாலங்கள் கண்காணிப்பு; தண்ணீரை வெளியேற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள இடங்களில் உரிய நேரத்தில் சரிசெய்து சீரமைக்க அந்த இடங்களில் போதுமான அளவு மணல் மூட்டைகள் மற்றும் பாலாஸ்ட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மற்றும் கனமழை வரை வாய்ப்பு உள்ளது. கரைக்கு அப்பால் அதிக அலைகள் வீசும் என்றும், சாலைகள் மற்றும் ஓலைக் குடிசைகள் சேதமடையலாம் மற்றும் அடுத்து வரும் 2 நாட்களில் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பிந்தைய கூட்டாக வெளியிட்ட ஒரு கூட்டு செய்தி அறிக்கையில், டிசம்பர் 2-ம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி சூறாவளி புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த புயல் டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை சென்றடையும். இது கிட்டத்தட்ட தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 5-ம் தேதி முற்பகல் நேரத்தில், நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையில், சூறாவளி புயலாக, மணிக்கு 80-90 கிமீ வேகத்தில், மணிக்கு 100 கிமீ வேகத்தில் புயல் காற்றுடன் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மைச்சாங்’ புயல் காரணமாக நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடையும் என்றும் தாழ்வான பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment