மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மி மழை பதிவாகி உள்ளது. மேலும், சென்னையில் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு மழை பொழிவு பதிவாகியிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மிக் ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் மட்டும் 29 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது. மேலும், சென்னை மாவட்டத்தில் எந்தெந்த ஏரியாக்களில் எவ்வளவு மழைபொழிவு பதிவாகி உள்ளது என்ற விவரங்களை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில், 14 மண்டலம் பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. இதயடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஆவடியில் 28 செ.மீ மழைபொழிவும், சென்னை ஆலந்தூரில் 25 செ.மீ மழை பொழிவும், 13வது மண்டலம் அடையாறு, 12வது மண்டலம் மீனம்பாக்கம் ஏ.டபிள்யூ.எஸ்-ல் 23 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
அதே போல, திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் (சென்னை), சோழவரம் ஆகிய இடங்களில் 23 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மகாபலிபுரம், சென்னை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நகர், கோடம்பாக்கம், தண்டையார் பேட்டை சி.டி மருத்துவமனை பகுதியில் 22 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், சென்னை டி.ஜி.பி அலுவலகம், பள்ளிகரணை அண்ணா பல்கலைக்கழகம், பொன்னேரி (திருவள்ளூர்) ஆகிய பகுதிகளில் 21 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் புழல், பெரம்பூர், ஐஸ் ஹவுஸ், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 20 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
அயனாவரம் வட்டாட்சியர் அலுவலகம், தரமணி, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம் மாவட்டம்), அண்ணா நகர், வி.ஐ.டி சென்னை (செங்கல்பட்டு மாவட்டம்) ஆகிய பகுதிகளில் 19 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/0yHAcr2EmFi1mxdwRsZU.png)
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனாம்பேட்டை, 8-வது மண்டலம் மலர் காலனி, அம்பத்தூர், அண்ணா பல்கலைக்கழககம் வளசரவாக்கம், குட் வில் பள்ளி வில்லிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ நந்தனம், கே.வி.கே காட்டுப்பாக்கம், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 18 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்), தாம்பரம், அம்பத்தூர் -2, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 17 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/0yHAcr2EmFi1mxdwRsZU.png)
செம்பரம்பாக்கம், கத்திவாக்கம், திரு.வி.க நகர், மாதவரம் ஆகிய பகுதிகளில் 16 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“