Advertisment

Chennai Flood Updates: மிக்ஜாம் புயல்: நிவாரண பணிகளில் ஈடுபட தி.மு.கவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

Chennai Rain Michaung Cyclone Live: மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM MK Stalin

Michaung Cyclone Live

மிக்ஜாம் புயல் விலகிச் சென்றதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை அளவு குறைந்தது. சென்னையில் கடந்த இரு நாள்களாக விடாமல் தொடர் மழை பெய்துவந்த நிலையில், திங்கள் இரவு முதல் மழை அளவு குறைந்தது.

Advertisment

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. மிகஜாம்எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் நேற்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே இன்று கரையைக் கடந்தது.

இதனிடையே, சென்னையில் நேற்று கொட்டித் தீா்த்த மழைக்கு 7 போ் உயிரிழந்தனா். மழைநீா் தேங்கிய தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்கள், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

வரலாறு காணாத மழையால் மாநகரமே வெள்ளக்காடானது. சாலைகளெங்கும் வெள்ளநீர் தேங்கியதால் பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

வெள்ளநீர் வடியாததால் இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து 5000 தொழிலாளர்கள் மீட்பு பணிகளுக்காக சென்னைக்கு வந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 05, 2023 23:22 IST
    மிக்ஜாம் புயல் தாக்குதல் : திமுகவினர் களத்தில் இறங்கி வேலை செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவு

    பேரிடர் பாதிப்புகளை விரைந்து களைய ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். `மிக்ஜாம்' புயல் நிவாரண பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு.  திமுகவினர் களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும்  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Dec 05, 2023 21:49 IST
    இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை : அமைச்சர் உதயநிதி

    சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த கனமழை தற்போது நின்றுள்ள நிலையில், சென்னையின் மக்கிய பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Dec 05, 2023 20:54 IST
    சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

    சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம். பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  பொதுமக்கள் அசாதாரண சூழலை புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க மின்சார வாரியம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது.

    சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னூட்டிகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டினப்பாக்கம், புளியந்தோப்பு, பின்னி மில், நேரு ஸ்டேடியம், தாமோதரன் தெரு, முத்தமிழ் நகர், கொளத்தூர் பாலாஜி நகர், சாத்தாங்காடு, மீஞ்சூர், கல் மண்டபம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழை நீர் தேக்கம் இருப்பதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



  • Dec 05, 2023 20:11 IST
    சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

    சென்னையில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழித்தடங்களிலும் அரைமணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு ரயில்கள் அரைமணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்.

    அதே போல் சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணம் ரயில்கள் அரைமணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். திருவெற்றியூர் குமிடிப்பூண்டி ரயில்கள் ஒருமணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். வேளச்சேரி – சிந்தாகிரிப்பேட்டை ரயில் அரைமணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். மறு அறிவிப்பு வரும்வரை இதே அட்டவணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 05, 2023 20:02 IST
    அடையாறு மற்றும் துறைமுகம் பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்

    சென்னை அடையாறு மற்றும் துறைமுகம் பகுதியில், விமானபப்டையின் 2 இலக்குரக ஹெலிகாப்டர்கள் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நாளையும் இந்த பணிகள் தொடரும் என பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.



  • Dec 05, 2023 19:13 IST
    மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் : அமைச்சர் அறிவிப்பு

    சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் சென்னை மற்றும் புறநகரில் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.



  • Dec 05, 2023 18:51 IST
    2015-க்கு பிறகு 23 அடியைத் தொட்ட செம்பரம்பாக்கம் ஏரி; 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6,110 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 24 அடியில் 23.45 எட்டியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டுள்ளது.



  • Dec 05, 2023 18:51 IST
    2015-க்கு பிறகு 23 அடியைத் தொட்ட செம்பரம்பாக்கம் ஏரி; 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6,110 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 24 அடியில் 23.45 எட்டியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டுள்ளது.



  • Dec 05, 2023 18:48 IST
    மீட்புப் படையினர் வரும் வரை காத்திருந்த அமீர் கான்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பாராட்டு

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “தனது பெயரை பயன்படுத்தாமல் அமீர் கான் மற்ற எல்லா குடிமகன்களையும்போல மீட்புப்படையினர் வரும்வரை காத்திருந்தது சிறப்பு. தனது பெயரை பயன்படுத்தி காரியத்தினை சாதித்துக்கொள்பவர்களுக்கு அமீர்க் கானின் செயல் ஒரு பாடம்” என்று அமீர் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • Dec 05, 2023 18:40 IST
    கரைபுரண்டு ஓடும் அடையாறு; வெள்ள நீர் சூழ்ந்த ஜாபர்கான்பேட்டை கரையோர பகுதி

    அடையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரால், ஜாபர்கான்பேட்டை பகுதியில் ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் தொடர்ந்து நீடிக்கிறது.

    jafarkhanpet



  • Dec 05, 2023 18:34 IST
    திருமழிசை சிப்காட் பகுதியில் ஜே.சி.பி.யில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி

    திருமழிசை சிப்காட் பகுதியில் ஜே.சி.பி.யில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.



  • Dec 05, 2023 18:21 IST
    மழை பாதிப்பு பகுதிகளில் புதன்கிழமையும் இலவசமாக ஆவின் பால் - தலைமைச் செயலாளர் அறிவிப்பு

    சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் (டிசம்பர் 06) இலவசமாக ஆவின் பால் வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும், மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதிக அளவில் மீனவர்களின் படகுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். 



  • Dec 05, 2023 18:13 IST
    புயல் பாதிப்புகளை திமுக அரசுக்கு கையாள தெரியவில்லை - சசிகலா விமர்சனம்

    தி.மு.க அரசுக்கு புயல் பாதிப்புகளை திமுக அரசுக்கு கையாள தெரியவில்லை என்று சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.



  • Dec 05, 2023 17:25 IST
    மழையை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லை... இன்னல்களை சந்திக்கிறார்கள் மக்கள் - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்” என்று கூறினார்.



  • Dec 05, 2023 17:12 IST
    வெள்ளத்தில் உதவி செய்பவர்களைக் குறை கூறாதீர்கள்... அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் - தங்கர் பச்சான்

    இயக்குனர் தங்கர் பச்சான்: “மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். குறை கூறுவதை விட்டுவிட்டு கட்சியினர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும். திரைப்பட நடிகர்களும், ரசிகர்களும் உதவினால் மக்களின் நிலைமை விரைவில் சீரடையும். மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 05, 2023 16:59 IST
    அடையாற்றில் 30 இடங்களில் இருந்து 40,000 கன அடி தண்ணீர் வருகை; தலைமைச் செயலாளர்

    சென்னை அடையாற்றில் 30 இடங்களில் இருந்து 40,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்



  • Dec 05, 2023 16:46 IST
    கரையை கடந்தது மிக்ஜாம் புயல்

    தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே மிக்ஜாம் புயல் கரையை கடந்தது. தீவிர புயலாகக் கரையைக் கடந்த நிலையில், சில மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 05, 2023 16:36 IST
    நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷாலை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறை

    சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். தன் தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு அமீர் கான் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது



  • Dec 05, 2023 16:26 IST
    2 நாட்களில் மட்டும் 73 செ.மீ மழை பதிவு; தலைமை செயலாளர்

    சென்னையில் மடிப்பாக்கம், பெருங்குடி பகுதியில் தான் மழை அதிகம் பெய்துள்ளது. 2 நாட்களில் மட்டும் 73 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்



  • Dec 05, 2023 16:00 IST
    சென்னையில் 80 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது; தலைமைச் செயலாளர்

    செம்பரம்பாக்கம் ஏரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் வடிய வடிய மின் விநியோகம் வழங்கப்படும். 80 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம். ஆவின் சார்பில் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மின் மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்



  • Dec 05, 2023 15:54 IST
    32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்பு; தலைமைச் செயலாளர்

    சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ள என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்



  • Dec 05, 2023 15:37 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை பாதிப்பால் ஒத்திவைப்பு

    சென்னை தீவுத்திடல் பகுதியில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • Dec 05, 2023 15:18 IST
    கனமழை பாதித்த பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

    சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த இ.பி.எஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்



  • Dec 05, 2023 15:09 IST
    சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம்; மனோ தங்கராஜ்

    சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளது.



  • Dec 05, 2023 14:30 IST
    சென்னை:செல்போன், இணைய சேவைகள் பாதிப்பு : பொதுமக்கள் அவதி

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள் பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி



  • Dec 05, 2023 14:27 IST
    மிக்ஜாம் புயல் அடுத்த 4 மணி நேரத்தில் கரையை கடக்கும்

    ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே காவாலியை நெருங்கும் மிக்ஜாம் புயல், பாப்பட்லாவுக்கு  அருகே தெற்கு  ஆந்திர கடற்கரை  பகுதியில் அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும்காவாலிக்கு வடகிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில்  மையம் கொண்டுள்ளது.  



  • Dec 05, 2023 14:07 IST
    செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

    வரலாறு காணாத கனமழையால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்



  • Dec 05, 2023 14:05 IST
    இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை

    தொடர் கனமழையால் சென்னை விமான நிலைய வளாகம் மற்றும் ஓடுபாதை மழைநீரில் மூழ்கிய நிலையில், தற்போது வெள்ளம் வடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது



  • Dec 05, 2023 14:03 IST
    துரைப்பாக்கம்: நேற்று முதல் குடிநீர், உணவின்றி தவிக்கும் மக்கள்

    துரைப்பாக்கம் சாய் நகர் பகுதியில் வீடுகளை மழை நீர் சூழந்ததால் நேற்று முதல் குடிநீர், உணவின்றி தவிக்கும் மக்கள்!



  • Dec 05, 2023 13:51 IST
    நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சுரங்கப்பாதை சீரானது

    நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீரானது. 



  • Dec 05, 2023 13:50 IST
    நங்கநல்லூரில் மழை நீர் வடிந்த இடங்களில் ஆவின் பால் விநியோகம் தொடக்கம்

    சென்னை: நங்கநல்லூரில் மழை நீர் வடிந்த இடங்களில் ஆவின் பால் விநியோகம் தொடக்கம். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் வாங்கிச் செல்கின்றனர். பால் விற்பனையகங்களுக்கு வாகனம் மூலமாக பால் கொண்டு சென்று விநியோகம் செய்யப்படுகிறது.



  • Dec 05, 2023 13:50 IST
    படூர் விஜய சாந்தி அப்பார்ட்மெண்டில்: மீட்கும் பணி தீவிரம்

    சென்னை: படூர் விஜய சாந்தி அப்பார்ட்மெண்டில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்



  • Dec 05, 2023 13:46 IST
    பால் விநியோகம் இல்லை என்றால் தகவல் தெரிவிக்கவும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

    "பொதுமக்கள் பால் குறித்து அச்சப்பட தேவையில்லை. பால் விநியோகம் இல்லை என்றால் எங்களுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக சீர் செய்யப்படும்.  சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்



  • Dec 05, 2023 13:45 IST
    40,000 பேருக்கு உணவு தயாரிக்கும் சென்னை மாநகராட்சி

    தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, தொப்பை விநாயகர் கோவில் தெரு, கண்ணகி நகர், வீராகுட்டி தெரு பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வெளியே வர முடியாத மக்களுக்கு வழங்குவதற்காக 100 சமையல் பணியாளர்களைக் கொண்டு 40,000 பேருக்கு உணவு தயாரிக்கும் சென்னை மாநகராட்சி



  • Dec 05, 2023 13:39 IST
    சென்னைக்கு வரும் மேலும் 2 மீட்பு குழு

    சென்னைக்கு வரும் மேலும் 2 மீட்பு குழு. புதுச்சேரி மற்றும் அரக்கோணத்தில் இருந்து 2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்னை வர உள்ளது. தற்போது 750 பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மீட்புக் குழுவிலும் தலா 25 வீரர்கள் இடம்பெறுவர். ஒரு குழு வேளச்சேரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது.



  • Dec 05, 2023 13:37 IST
    சென்னை: வெள்ளம்: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

    சென்னையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தகவல்



  • Dec 05, 2023 12:42 IST
    ஆந்திரா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து

    கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து ரயில்களும் வரும் 8ம் தேதி வரை ரத்து - தென்னக ரயில்வே



  • Dec 05, 2023 12:36 IST
    பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி கரை உடைந்தது

    பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்து குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்ததால் வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலை வெள்ளத்தில் மூழ்கியது. பொதுமக்கள் கடும் அவதி 



  • Dec 05, 2023 12:13 IST
    4 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை

    மிக்ஜாம் புயல், மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை.

    சில இடங்களில் மழைநீர் வடியாததால், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிப்பு.



  • Dec 05, 2023 12:12 IST
    பம்மல், பொழிச்சலூரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

    பம்மல், பொழிச்சலூர் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் 



  • Dec 05, 2023 11:55 IST
    பாபட்லா - ஓங்கோல் இடையே கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்

    மிக்ஜாம் புயல் சற்று நேரத்தில் ஆந்திர மாநிலம் பாபட்லா - ஓங்கோல் இடையே கரையை கடக்கிறது. 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 



  • Dec 05, 2023 11:53 IST
    தமிழகத்திற்கு ரூ.5000 கோடி வழங்க வேண்டும்

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5000 கோடி வழங்க வேண்டும் - மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்



  • Dec 05, 2023 11:30 IST
    சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

    சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. மழைநீர் தேக்கத்தால் பங்க்குகளில் இன்றும் விநியோகம் பாதிப்பு



  • Dec 05, 2023 11:29 IST
    மழை பாதிப்பை அரசியலாக்க நான் விரும்பவில்லை: ஸ்டாலின்

    2015-ல் பெய்த மழை பாதிப்பால் 199 பேர் உயிரிழந்தனர். தற்போது அதிக மழையால் 7 பேர் பலி. 

    இயற்கை சீற்றங்களால் மக்கள் இன்னல்களுக்கு ஆளானாலும், அவர்களை அதில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம். 

    கூவம், அடையாறு முகத்துவாரங்களில், அலை சீற்றம் காரணமாக தண்ணீர் வடிவதில் தாமதம். 2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம், தற்போது இயற்கை வெள்ளம். 

    அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இதற்கு காரணம்- முதல்வர்  ஸ்டாலின்



  • Dec 05, 2023 11:23 IST
    இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும்

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் ஆபத்தை கருத்தில் கொண்டு நிதானமாக பணி நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களும் சூழலைப் புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும்- அமைச்சர் தங்கம் தென்னரசு 



  • Dec 05, 2023 11:23 IST
    இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும்

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் ஆபத்தை கருத்தில் கொண்டு நிதானமாக பணி நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களும் சூழலைப் புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்று மாலைக்குள் மின் விநியோகம் சீராகும்- அமைச்சர் தங்கம் தென்னரசு 



  • Dec 05, 2023 11:04 IST
    மு.க. ஸ்டாலின் விளக்கம்

    மழை நீர் வடிகால் நல்லபடியாக வேலை செய்தாலும் வெள்ள நீர் கடலில் கடக்கக் கூடிய அடையாறு மற்றும் கூவம் முகத் துவாரங்களில் புயல் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்ததால், நதிகளில் வெள்ள நீர் மிகவும் மெதுவாக கடந்துள்ளது.

    இருப்பினும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பெருமழையில் தாக்கம் குறைந்துள்ளது. வெள்ள நீரும் விரைவாக வடிந்து வருகிறது.



  • Dec 05, 2023 10:54 IST
    மின்சாரத்துறை அறிவுறுத்தல்

    படிப்படியாக மின்சாரம் சீராக்கும் பணிகள் சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது. மின் சாதனங்களை தேவைக்கேற்ப ஒவ்வொன்றாக இணைக்கவும்! -தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவுறுத்தல்!



  • Dec 05, 2023 10:53 IST
    பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதில் தாமதம்

    பெட்ரோல், டீசலில் மழை நீர் கலந்திருக்கும் என்பதால் உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்ய நேரமாவதால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தகவல்



  • Dec 05, 2023 10:46 IST
    பைபர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

    மேற்கு தாம்பரம் சி.டி.ஓ காலனியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பைபர் படகுகள் மூலம், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் காட்சி

    Credit: Sun News Twitter



Chennai Rain Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment