வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார், அண்ணாமலை அரைவேக்காட்டு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது, என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகம், புதுவையில் பாஜக உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறது. சமூக வலைதளங்களில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க பொய் தகவல்களை பரப்பினர்.
இது பொய்யானது தற்போது உறுதியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். இதில் பொறுப்புள்ள கட்சித் தலைவர் பேசியுள்ளது வேதனையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அண்ணாமலை அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
கலால் துறையில் ரூ.20 லட்சம் காலையில் கொடுத்தால், மாலையில் ரெஸ்டோ பார் நடத்த அனுமதி கிடைக்கிறது. ஏற்கெனவே 400 மதுபார் இருந்த புதுவையில் தற்போது 900 மது பார் உருவாகியுள்ளது. இந்த ரெஸ்டோ பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தி கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர்.
இதற்கு முதல்வர் வருமானம் வேண்டும் என்கிறார். அரசுக்கு வருமானம் வேண்டுமா? தனிப்பட்ட முறையில் அவருக்கு வருமானம் வேண்டுமா? கலால் துறை லஞ்சத்தில் அமைச்சர்களுக்கும் பங்கு பிரிக்கப்படுகிறது" என்றார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“