scorecardresearch

தாலியை பறித்து சென்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி.

கோவை

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி.

இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 80,000 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்துள்ளார். இருப்பினும் அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன்(43) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரரே இது போன்று செயின் பறிப்பில் ஈடுபட்டது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Military man arrested for chain scratching