கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தில் கீரணத்தம் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பாலை கொண்டு வந்து இந்த சங்கத்தில் விற்பனை செய்கின்றனர்
அதனை இப்பகுதி உள்ள பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் மேலும் மீதமுள்ள பாலை ஆவின் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில் பால் கொள்முதல் விலை தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவே அதனை தமிழ்நாடு அரசு உயர்த்தி தரவேண்டும் என்று கீரணத்தம்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் பாலுக்கு உண்டான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாடுகளை பராமரிக்க தேவையான வேலையாட்கள் புண்ணாக்கு பசும் தீவனம் மருத்துவ செலவு உள்ளிட்டவைகள் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை கூட்டுறவு சங்கங்களில் கொடுக்கும் பாலுக்கான கொள்முதல் விலை கட்டுப்படி ஆகவில்லை எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக
போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள்
தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“