மூலப்பொருட்கள் விலை உயர்வால் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் தொழிலை முடக்கியுள்ளது.
ஓ.இ.மில் உரிமையாளர்கள் "117 ரூபாய்க்கு கழிவுப்பஞ்சு விற்கப்படும் நிலையில் 180 ரூபாய்க்கு விற்று வந்த ஓ. இ.மில் நூல்கள் தற்போது 140 ரூபாய்க்கு கூட வாங்க ஆட்கள் இல்லை. மூலப்பொருள் விலை உயர்வால் நெருக்கடிக்கு உள்ளான நிலையில், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கூடுதல் சுமையால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஓ. இ.மில்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கழிவுப் பஞ்சிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த ஓ.இ.மில்கள் பருத்தி கழிவிலிருந்து நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல்களும் பிளாஸ்டிக் பாட்டில் பைபர்,ஆயுத்த ஆடை நிறுவ பனியன் கட்டிங் கழிவிலிருந்து 15 லட்சம் கலர் நூல் உற்பத்தியும் செய்யப்படுகிறது. ஓ.இ. மில்களுக்கான மூலப்பொருளான கழிவுப் பஞ்சு கடந்த ஒரு வருடமாக வரலாறு காணாத விலையில் விற்று வருவதாகவும், கடந்த 20 வருட காலமாக பருத்தி விலையில் 60% விலையில் விற்கப்பட்டு வந்த கழிவுப்பஞ்சு தற்போது 80% வரை உயர்ந்து நூற்பாலைகள் விற்றதால் ஓ.இ. மில்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/98efcf44-708.jpg)
இதற்கிடையில் கூடுதலாக மாநில அரசின் மின் கட்டண உயர்வு தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் ஓ.இ. மில்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
மூலப்பொருட்கள், மின் கட்டண உள்ளிட்ட விலை உயர்வால் "ரூ.10 முதல் 15" கிலோவுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இந்த விலை கிலோவுக்கு 20 என குறைந்தால் மட்டுமே ஓ.இ. மில்களை நடத்த முடியும் எனக்கூறும் ஓ.இ. மில் உரிமையாளர்கள், ஓ.இ.மில் நூல்கள் இன்றளவும் 4 ஆண்டுகளுக்கு முன் விலையிலேயே விற்பனையாகி வரும் நிலையில் கழிவு பஞ்சு விலை தற்போது "97 ரூபாய்" கிலோவிற்கு இருக்க வேண்டிய நிலையில் "117 ரூபாய்க்கு" விற்கப்படுவதும் இதனுடன் மின் கட்டணம் உயர்வு என்பது பல மடங்குகள் அதிகரித்திருப்பதும் செலவீனங்களை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கூறுகின்றனர்.
ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு "40 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி பாதிப்பும் நாள் ஒன்றுக்கு ரூபாய் "10 கோடி வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன் "2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உற்பத்தி நிறுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி ஓ.இ. மில்களிடமிருந்து நூல் வாங்கும் விசைத்தறியாளர்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/post_attachments/2d5b0bbb-9e8.jpg)
எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களால் செயல்படும் இந்த ஓ. இ. மில்களும் விசைத்தறியாளர்களும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வேஷ்டி, துண்டு, நைட்டி, லுங்கி, போர்வை, தரை விரிப்பு போன்ற துணி வகைகளை தயாரிக்கும் ஜவுளி பிரிவுகளில் வருபவர்கள். ஏற்கனவே கடந்த ஓராண்டாக 50% மட்டுமே ஓ.இ. மில்கள் உற்பத்தி நடந்து வரும் நிலையில் கடந்த "5 மாதங்களில் 2'வது முறையாக தற்போது உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் உற்பத்தி நிறுத்தத்தின் போது அமைச்சர்கள், அதிகாரிகள் உயர்மட்ட கூட்டத்தில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், மில்கள் தங்களது உற்பத்தி நிறுத்தத்தை திரும்பப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“