Advertisment

நீண்ட நாள் கோரிக்கை; ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம்: அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என் நேரு

சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை. ஆவடி பகுதியில் தேங்சிய தண்ணீர் முற்றிலுமாக சரி செய்யப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

author-image
WebDesk
New Update
KN Nehru

Trichy: 108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். 

Advertisment

உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் ஸ்ரீரங்கத்தில் இல்லாததால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இப்பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை. ஸ்ரீரங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 

KN Ne1.jpg

இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று (டிச.15) திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய நிதி 2023-24-ன் கீழ் ரூபாய் 11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இன்று இங்கு 11 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பணிகள் நடைபெற உள்ளது. 6 மாதத்தில் பணிகள் முடிவடையும். எல்லா வசதிகளும் கொண்ட பேருந்து நிலையமாக இருக்கும். கொள்ளிடம் ஆற்று பகுதியில் 6 ஏக்கர் இடத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ளது. 

KN Ne2.jpg

கொள்ளிட கரையில் உள்ள இந்த 6 ஏக்கர் அறநிலையத்துறை வசம் உள்ளது. அது கிடைத்தால் சுமார் 11 ஏக்கர் இடம் இருக்கும். ஸ்ரீரங்கத்தில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். 

சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை.  ஆவடி பகுதியில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம், சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா என நகைச்சுவையாக பதில் அளித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற சம்பவம் குறித்து கேட்ட பொழுது, ஸ்ரீரங்கத்தில் நாங்கள் லோக்கல்ல இருக்கிறோம், எங்கள் கிட்ட போய் நாடாளுமன்ற பற்றி கேட்கிறீர்களே, என்று நகைச்சுவையாக பதில் அளித்து கடந்து சென்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திமுக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment