பொள்ளாச்சி அருகே முறையான ஆவணங்கள் இல்லாமல், கனிம வளங்களை கடத்தி செல்ல முயன்ற மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/j0QrNhkb3lMKNu5gQ87U.jpg)
அப்போது கேரள மாநிலத்திற்கு கற்களை ஏற்றி சென்ற மூன்று லாரிகளை மறித்து ஆவணங்களை சோதனை செய்தனர். அதில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் 7 யூனிட் அளவுள்ள சாதாரண கற்களை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று டிப்பர் லாரியை கைப்பற்றி ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு சென்ற மூன்று டிப்பர் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனிம வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“