Advertisment

தாது மணல் விவகாரத்தில் கோர்ட் நியமித்த வக்கீலை நீக்க மறுப்பு

தாதுமணல் வழக்கில் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு

புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாதுமணல் கொள்ளை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்டுளள வழக்கறிஞரை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தாது மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீது 4ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Advertisment

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி.சுரேஷ் கடந்தாண்டு நியமிக்கப்பட்டார். அதன்படி வழக்கறிஞர் வி.சுரேஷூம் தனது ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி.சுரேஷை ‘அமிகஸ்-க்யூரி’ என்ற அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என திருநெல்வேலியைச் சேர்ந்த டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பொது மேலாளர் ஸ்டீபன் டேவிட்மனு தாக்கல் செய்தார்.

அதில், வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட கடற்கரை தாதுமணல் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுந்தரம் என்பவருக்காக வழக்கறிஞர் வி.சுரேஷூம் அவரது மனைவியும் ஆஜராகியுள்ளனர். அவர் உள் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அதனால், தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் அவரிடம் நடுநிலைமையை எதிர்பார்க்க முடியாது. சுரேஷ் ஒரு வழக்கறிஞர் தானே தவிர தொழில் நுட்பரீதியாக தாது மணல் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் அல்ல. ஆகவே அவரை இந்த வழக்கில் இருந்து நீதிமன்றத்திற்கு உதவும் நபராக (அமிகஸ் க்யூரி) என்ற பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமிகஸ் க்யூரியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் தொழில் நுட்ப ரீதியாக தேர்வு பெற்றவர் அல்ல. மேலும் அவர் மீதான மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் கடுமையாக உள்ளது. எனவே அவரை இந்த வழக்கில் அமிகஸ் க்யூரி இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்ன ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது என மனுதரார் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

அப்போது டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.

இதனை அடுத்து அமிகஸ் க்யூரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தெடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அப்போது டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்ட தடையால் தங்களின் தொழில் பாதிக்கபட்டுள்ளதாகவும் முறையாக அனுமதி பெற்ற பின்னரே தாது மணல் நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார். எனவே தடை விதிக்கப்பட்டது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் ஏற்கனவே கடந்த முறை விசாரணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி கார்னெட், இலுமினெட், ரூட்டைல், சிலிமனைட், மோனோசைட் போன்ற தாதுக்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில், மோனோசைட் அனு கனிம ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே, மோனோசைட்டை மற்ற தாதுக்களில் இருந்து பிரித்து எடுப்பது என்பது கடினம். ஆகையால், தமிழக அரசு ஹைதராபாத்தில் உள்ள அனு கனிம ஆராய்ச்சி இயக்குநரகம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கனிமவள ஆணையத்தின் நிபுணர்களை இந்த கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து, மோனோசைட் தாதுவின் இருப்பு நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டோம். அந்த அறிக்கை கிடைத்துள்ளதா என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைக்க 90 நாட்கள் ஆகும் என தெரிவித்தார்.

இதனை அடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசின் அனுசத்தி துறையின் கருத்தை அறிந்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் முன் கூட்டியே கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டனார். மேலும் தாது மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து விசாரணை நாளை(4.10.17) தள்ளிவைத்தனர்.

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment