mini auto fell down well near thuraiyur 8 died – துறையூர் அருகே கிணற்றில் விழுந்த மினி வேன் : குழந்தை உட்பட 8 பேர் பலியான பரிதாபம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று 20க்கும் மேற்பட்டோருடன் லோடு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவின் முன் பக்க சக்கரம் வெடித்ததால், நிலைத் தடுமாறிய ஆட்டோ, சாலையின் அருகில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிலர், கோவில் திருவிழாவிற்காக லோடு ஆட்டோவில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.