Advertisment

கோயிலின் வருமானத்தை பொறுத்தே ஊதியம்: குறைந்தபட்ச ஊதியத்துக்கு நீதிமன்றம் தடை

கோயிலின் வருமானத்தை பொறுத்தே ஊதிய நிர்ணயம். பணியார்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்க முடியாது- அறநிலையத்துறை வாதம்

author-image
WebDesk
New Update
High Court Madurai Bench notice to public welfare department secretary in PIL case, High Court Madurai Bench order to TN govt to give 5 laksh compansation to child, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலருக்கு நோட்டீஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுரை ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவு, High Court Madurai Bench, public welfare department secretary, PIL case

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மணியம் உள்ளிட்டோருக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் கோயில்களுக்கு பொருந்தாது.
ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நிறுவனம். அந்தந்த கோயிலின் வருமானத்தைப் பொறுத்தே ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க முடியாது. சில கோயில்கள் நிதி சிக்கல்களை தீர்க்க கோயில் பணியாளர்கள் நல நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment