கேக்கலையா... கேக்கலையா என்று கேட்கும் விஜய்; திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா? பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

த.வெ.க தலைவர் விஜய், தி.மு.க மீது வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய், தி.மு.க மீது வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
anbil

கேக்கலையா... கேக்கலையா என்று கேட்கும் விஜய்; திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா? பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் சுற்றுப் பயணம் மற்றும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். முதலில் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

Advertisment

திருச்சி மரக்கடையில் தனது முதல் பிரச்சார பயணத்தை துவக்கிய விஜய் பேசும்போது, திருச்சியில், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். 

பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார். திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. 

Advertisment
Advertisements

மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்". மேலும், தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பட்டியலிட்டார்:-

கேக்கலையா கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா?  திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

கல்லூரி, டைடல் பார்க், அங்காடி, பேருந்து முனையம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் நூலகம், அறிவுசார் மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: