உதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..

உதயநிதிக்கு அவருடைய நண்பனும் அமைச்சருமான அன்பில் மகேஷும் மாப்பிள்ளை சபரீசனும் சேர்ந்து ரசனையுடன் ஒரு நெகிழ்ச்சியான பரிசு அளித்துள்ளனர்.

minister anbil mahesh gift to udhayanidhi, anbil mahesh, udhayanidhi, அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி, சபரீசன், அன்பில் மகேஷ் உதயநிதிக்கு அளித்த அன்பு பரிசு, sabreesan, stalin udhyanidhi, stalin karunanidhi, dmk

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு அவருடைய நண்பனும் அமைச்சருமான அன்பில் மகேஷும் மாப்பிள்ளை சபரீசனும் சேர்ந்து சேர்ந்து ரசனையுடன் ஒரு நெகிழ்ச்சியான பரிசு அளித்துள்ளனர். உதயநிதி அந்த பரிசைப் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார். அது என்ன பரிசுனு பாருங்க…

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நல்ல தொடக்கத்தை மேற்கொண்டுள்ளார் என்று அவரது நடவடிக்கைகளைப் பாராட்டி வருகின்றனர். மு.க.ஸ்டாலினுடைய மகன் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 69 வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உதயநிதி தனது தொகுதியில் மட்டுமல்லாமல் திமுக இளைஞரணி செயலாளராக தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதி திமுகவின் வெற்றிக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பர்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறாதது அவருடைய ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், உதயநிதியின் நண்பனும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ இருவரும் நண்பர்கள் என்பது பலரும் அறிந்தது. உதயநிதியின் தாத்தா கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் உடைய தாத்தா அன்பில் தர்மலிங்கம். அந்த வகையில், உதயநிதியின் அப்பா மு.க.ஸ்டாலினும் அன்பில் மகேஸின் அப்பா பொய்யாமொழியும் நெருக்கமானவர்களாக இருந்தனர். தற்போது உதயநிதியும் அன்பில் மகேஸும் மூன்றாவது தலைமுறையாக திமுக பாரம்பரியக் குடும்ப நண்பர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி – அன்பில் மகேஷ் இருவருமே எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ள நிலையில், அன்பில் மகேஷ் அமைச்சராகியுள்ளார்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திமுக மாநில செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதியிடம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு ஒரு நெகிழ்ச்சியான நெகிழ்ச்சியான புகைப்படத்தை பரிசளித்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் மு.க.ஸ்டாலினை அவருடைய தந்தை கருணாநிதி முத்தமிடுகிற காட்சியும் அருகே உதநிதியை அவருடைய தந்தை மு.க.ஸ்டாலின் முத்தமிடுகிற காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் இணைந்து உதயநிதிக்கு அளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பார்த்து உதயநிதி நெகிழ்ந்து போயிருப்பது தெரிகிறது.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுடைய அமையவிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சிறப்பு மிகுந்த புகைப்படத்தை, நானும், சபரிஸ் மாப்பிள்ளையும் பரிசாக வழங்கினோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷும் மாப்பிள்ளை சபரீசனும் சேர்ந்து உதயநிதிக்கு அளித்துள்ள இந்த பரிசு மிகவும் ரசனைமிக்க நெகிழ்ச்சியான ஒரு பரிசுதான் அதில் சந்தேகமில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister anbil mahesh present a gift to udhayanidhi

Next Story
அரசு இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? திமுகவினர் கூறும் காரணம் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com