Advertisment

கலைஞர் நூற்றாண்டு விழா: மாணவர் மன்றம் தொடக்கம்; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அன்பில் மகேஷ்

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில் கல்லூரிகளில் மாணவர் மன்றங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

author-image
WebDesk
New Update
stud

கலைஞர் நூற்றாண்டு விழா: மாணவர் மன்றம் தொடக்கம்; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அன்பில் மகேஷ்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கழக மாணவர் அணி மாநில செயலாளர்-சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் உள்ள கல்லூரிகளில் மாணவர் மன்றங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

Advertisment

an

பின்னர், திருச்சி தெற்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் மற்றும் மேலாடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது;
    
2006 - 2011ம் ஆண்டில் மீனவர்களுக்கு 88 கோடி 51 லட்சம் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியவர்கள் மறைந்த கலைஞர் அவர்கள். மீனவர்களுக்கான சேமிப்புத் தொகை மகளிர் காண நிவாரணத் தொகை 61 கோடி 57 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. மீனவர்கள் என்பவர்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கீடு அதிகமாக இருக்கிறது.

a

தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1076 கிலோமீட்டர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு அதிகம் உண்டு. நீங்கள் வேர்வை சிந்தி உழைக்கக் கூடியவர்கள், கோட் சூட் போட்டு கொண்டு இருப்பவர்கள் அல்ல. இதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தான் மீனவர் அணி உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன.
   
போர் வந்தால் ராணுவ வீரர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இருக்குமோ இல்லையோ என்று சொல்ல முடியாது. மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்லும்போது அவர் குடும்பத்தார் உயிரை பிடித்துக் கொண்டு இருப்பார்கள், பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று மீனவர்களுக்கு தினம் தினம் போர் தான். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு தமிழருக்கும் கடமை உண்டு என்றார்.

an
      
இந்நிகழ்வில் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாநில கழக மீனவர் அணி செயலாளர் ஏ.ஜோசப் டான்லின், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முத்து வெங்கடேஷ், மாநகர மாணவர் அணி செயலாளர் அசாருதீன்,  மாவட்ட மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சி எஸ் கண்ணன், பி எஸ் கண்ணன், மாவட்ட மாநகர திமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், செங்குட்டுவன், லீலா வேலு, குணசேகரன், நூர்ஜகான், ராஜேஷ்வரன் பகுதி கழகச் செயலாளர்கள் தர்மராஜ், மணிவேல், எம்.ஜி.விஜயகுமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்துக்கொண்டனர்.
   
முன்னதாக, மாவட்ட மீனவர் அணி தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சாந்தகுமாரி சாலமோன்,  மீனவர் அணி மாநகர தலைவர் ரத்தினவேல் மற்றும் மாநகர அமைப்பாளர் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
   
இறுதியில் 36-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான கே.கே.கே.கார்த்தி நன்றியுரையாற்றினார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment