முனைவர் பட்டத்திற்கு ரெடியாகும் அன்பில் மகேஷ்: திருச்சி கருத்தரங்கில் ஆய்வு அறிக்கை

திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் அமைச்சர் அன்பில் மகேஸ் முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளார்.

திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் அமைச்சர் அன்பில் மகேஸ் முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
TN Education minister Anbil Mahesh Teacher posts ignored in 10 year rule AIADMK Tamil News

திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது குறித்த கேள்விக்கு, "கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம்." என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Anbil Mahesh: திருச்சி தேசிய கல்லூரியில் இன்டர்நேஷனல் காங்கிரஸ் ரினைசன்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் (ICRS - International Congress On Renaissance in Sports) எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "திருச்சியில் நடைபெறும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுனர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர். அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன்.

தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் 50-கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்." என்று தெரிவித்தார். 

Advertisment
Advertisements

நடிகர் விஜய் அரசியல் தொடங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், "நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கும், உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும்போதும் அன்பொழுக பேசக்கூடியவர் தான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார். 

திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது குறித்த கேள்விக்கு, "கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும்போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும்" என்றார்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், "தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்" என்றும் அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: