சத்தீஸ்கர் மாநில சாரண சாரணியரிடம் ஜோதியை வழங்கிய அன்பில் மகேஸ்; வெள்ளி யானை விருது அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதையும் பாரத சாரண சாரணியா் இயக்க தேசிய தலைமை ஆணையா் கே.கே. கண்டேல்வால் அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
scout anbil maesh

பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதையும் பாரத சாரண சாரணியா் இயக்க தேசிய தலைமை ஆணையா் கே.கே. கண்டேல்வால் அறிவித்தார்.

Advertisment

பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடக்க விழாவை திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் நிறைவு விழா நேற்று 2- ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று வைர விழா Jamboree-2025 விழாவின் இறுதி நிகழ்வில் 24 மாநிலங்கள், நான்கு நாடுகள் கலந்து கொண்ட சாரண சாரணிய இயக்க அணி தலைவர்களுக்கும், மாநிலங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவு பரிசு வழங்கினார்.
விழாவின் Chief Commissioner scout wing, Chief Commissioner Guide wing, Overall performance Chambionship of this event ஆகிய விருதுகளை ராஜஸ்தான் மாநிலம் வென்றதையடுத்து அம்மாநில அணி தலைவர்களிடம் விருதுகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். 

Jubilee Jamboree-2025 விழாவின் இறுதி நிகழ்வில்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாவின் நினைவாக அ‌ஞ்ச‌ல் அட்டை வெளியிட்டு சிறப்பித்தார். பின்னர், அடுத்த ஜாம்பூரி நிகழ்வானது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறுவதால் அதற்கான ஜோதியை, தமிழக சாரண சாரணியர் இயக்க தலைவரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் அம்மாநில சாரண சாரணியரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

அமைச்சருக்கும் ஆட்சியருக்கும் விருது அறிவிப்பு

Advertisment
Advertisements

பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை சிப்காட்டில் நடைபெற்ற சாரணா் இயக்க வைர விழாவில் பங்கேற்ற பாரத சாரண சாரணியா் இயக்க தேசிய தலைமை ஆணையா் கே.கே. கண்டேல்வால், மணப்பாறையில் சாரணா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றி, வைர விழாவை சிறப்பாக நடத்தி வரும் தமிழக சாரண சாரணியா் இயக்கத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், சாரணா் இயக்க பெருந்திரளணியை சிறப்பாக நடத்தியதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதை அறிவித்தாா்.

வெள்ளி யானை சிலை விருது சாரணா் இயக்கத்தில் வழங்கப்படும் மிக உயா்ந்த விருதாகும். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குவார் என கண்டெல்வால் தெரிவித்தாா்.

முன்னதாக, பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு பெருந்திரளணி விழாவை சிறப்பாக நடத்தியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை முதல்வா் மு.க. ஸ்டாலின் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்

Anbil Mahesh Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: