/indian-express-tamil/media/media_files/1327seUH5TB4DesaCUJ3.jpg)
ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் கால்நடை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு:
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு விடுதி கட்டப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப்பிராணிகளுக்கு ஒரு கோடியே செலவில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய் கடி நோய் தடுப்பூசி போடப்படும்.
தொடர்ந்து, “கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவன உற்பத்திக்கான மேம்படுத்தப்பட்ட உத்திகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும்” என்றார்.
இதற்கிடையில், 'ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 6 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் நாட்டு கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படும்” என்றார்.
மேலும், “மாநிலத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் பொருட்டு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளின் 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.