/tamil-ie/media/media_files/uploads/2023/02/C-V-Shanmugam_AIADMK.jpg)
சி.வி சண்முகம் பேட்டி
ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை நடந்துவருகிறது என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். மேலும் இங்கு தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்றால் இந்தத் தொகுதியை மத்திய காவல் படை கட்டுப்பாட்டில் தொகுதியை கொண்டுவந்து, தலைமை தேர்தல் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் புகார் அளித்தார்.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “ஈரோடு இடைத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுப்படிகள் உள்ளன.
ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 876 பேர் உள்ளனர்.
இந்த வாக்காளர்களில் வாக்காளர் பட்டியில் காலமானவர்களின் பெயர்கள் 7947 உள்ளன. அதாவது கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் அந்தத் தொகுதியில் இல்லை.
சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ளனர். எனவே இந்த மோசடி வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும். இதைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.
இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார். தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முறைகேடுகளில் ஈடுபடுகிறது” என்றார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயமா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த சண்முகம், “வாக்காளர்கள் பட்டியலில் பெரும் குளறுப்படிகள் உள்ளன. இதை அதிமுக ஆதாரப்பூர்வமாக கூறியுள்ளது. நாங்கள் வெற்று கூச்சல் போடவில்லை” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.