மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு அல்வா கொடுத்து நம்மிடம் இருந்து பிரித்துவிட்டனர் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், "ஜெயலலிதா கொடுமையான சர்க்கரை வியாதி உடையவர். அவர் மருத்துவமனையில் இருந்த போது, யாராவது அவருக்கு அல்வா கொடுப்பாங்களா?. ஆனா, இவங்க கொடுக்குறாங்க. கிராமத்தில் இருக்குற படிக்காத வைத்தியர் கூட, சர்க்கரை வியாதி இருப்பவருக்கு இனிப்பு தரமாட்டார்.
ஆனால், உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும் நிலைமையில், ஜெயலலிதாவிற்கு இனிப்பு கொடுக்கிறார்கள் என்றால், இவர்களது எண்ணம் என்ன?. அந்த நோய் குறையாம பார்த்துக்கணும். அந்த நோய் முற்றி, அம்மாவுக்கு இயற்கையாக மரணம் வரணும். இப்படி அம்மாவை திட்டம் போட்டு நம்மிடம் இருந்து பிரித்துவிட்டார்கள்" என தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, இன்று ஐகோர்ட்டில் தனது வாதத்தை முன்வைத்த அப்போலோ, 'ஜெயலலிதாவுக்கு சிகிச்சையின் போது பழரசம் மட்டுமே கொடுக்கப்பட்டது' என்று தெரிவித்திருக்கிறது.