‘வருத்தம் தெரிவித்தேன்; எல்லாம் முடிந்தது’ – திண்டுக்கல் சீனிவாசன் மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து தனது காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்! இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனை பழங்குடி அமைப்புகள் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தனர். அமைச்சருக்கு எதிராகப் புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, அமைச்சர் வனத்துறை அதிகாரிகளை அனுப்பி சிறுவனின் உறவினர்களுடன் […]

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து தனது காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனை பழங்குடி அமைப்புகள் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தனர். அமைச்சருக்கு எதிராகப் புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்த, அமைச்சர் வனத்துறை அதிகாரிகளை அனுப்பி சிறுவனின் உறவினர்களுடன் பேசி ஊர்மக்களோடு ஊட்டிக்கு வருமாறு கூறியிருந்தார். வனத்துறை ஏற்பாடு செய்த மஸ்தா வாகனத்தில் அமைச்சர் தங்கியிருந்த தமிழகம் மாளிகைக்கு இரு சிறுவர்களும் வந்தனர்.

ஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

அவர்களுடன் ஏராளமான பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியினப் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோர் உள்ளே பேச்சுவார்த்தை நடத்தினர்.

உள்ளே சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு வெளியில் வந்த அமைச்சர், எல்லாம் முடிந்தது… சிறுவனிடமும் அவரின் தாயிடனும் வருத்தம் தெரிவித்தாகிவிட்டது. நாங்கள் சமாதானமாகிவிட்டோம்’ எனப் பேட்டி கொடுத்தார்.

பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாயார் காளியம்மாள் பேசுகையில் `”எங்க கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டிருக்கோம். வேலை வாய்ப்பும் கேட்டோம். எல்லாமே ஏற்பாடு பன்றேன்னு சொன்னாங்க. இனிமேல் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தப் பகையும் இல்ல. எல்லாமே தீர்ந்துவிட்டது. இனிமேல் என்னோட பையன் இது விஷயமாக பேச மாட்டான்””எனக் கூறி தன் மகனை அழைத்துக்கொண்டு வனத்துறை வாகனத்தில் கிளம்பிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பழங்குடி சிறுவனின் குடும்பத்தினர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளனர்.

அதிமுக வெற்றி செல்லும்; திருமாவளவன் வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட் தீர்ப்பு

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister dindigul srinivasan apology complaint withdrawn

Next Story
ஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்புjallikattu madras high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com