/tamil-ie/media/media_files/uploads/2019/03/slider-1-4.jpg)
minister dindigul srinivasan campaign video
minister dindigul srinivasan campaign video : திண்டுக்கல் தொகுதியில் நிற்கும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்ட அமைச்சர் சீனிவாசன் மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமகவுக்கு ஆதரவு கேட்டு அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாமகவுக்கு ஆதரவு கேட்டு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
அப்போது பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டார்.இதனால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.பின்பு அங்கிருந்தவர்கள் திருத்தி கூறிய பின்பு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டினார்.
இதனை மேடையில் இருந்த டாக்டர் ராமதாஸ் பார்த்து சிரித்திக் கொண்டிருந்தார்.
பரபரப்புக்கு பெயர் போன அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் அடிக்கடி சர்ச்சை பேச்சில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்று. முன்னதாக கடந்த வாரம் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது,
பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உலறியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.