அதிமுக நிர்வாகிகள், தலைவர்கள் பெயரை மாற்றிக் கூறுவது, அமைச்சர்கள் பெயரை தவறாகக் கூறுவது போன்றவை வழக்கமான நிகழ்வாகிவிட்டது. தற்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் என உளறிய சர்ச்சைகளும் உண்டு. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று முன்தினம்(ஜன.2) எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சாதனையை பட்டியலிட்டுப் பேசினார். பின்னர், “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்துள்ளார். மிகவும் அருமையான பட்ஜெட். ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கொத்தனார் மற்றும் சித்தாள் வேலை செய்பவருக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது உண்மையில் மிகப் பெரிய விஷயம்” எனப் பேசியுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Minister dindugal srinivasan wrongly mentioned pm name as vajpayee
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்