திமுக பொதுச் செயலாளரும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் அண்ணன் துரை மகாலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள முகமது ரிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், துரை மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (டிசம்பர் 23) உயிரிழந்தார். அவருக்கு வயது 89.
அமைச்சர் துரை முருகனின் சகோதரர் துரை மகாலிங்கம் காலமான செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று துரை மகாலிங்கம் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"