தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம், துணை முதல்வர் பதவி என்று வரும்போது உங்களுக்கு தருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கட்சிக்காரர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. துணை முதல்வர் பதவி கொடுத்தால், உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார்தான் வேண்டாம் என சொல்வார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய, அமைச்சர் துரைமுருகன், “இது எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரி சபை, தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று கூறினர்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“